ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 செயற்கைக்கோள், டிசம்பர் 4ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய வணிகம் இந்தியா உலகம் ஐரோப்பா சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 என்ற செயற்கைக்கோளை, டிசம்பர் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா மூலம் இஸ்ரோ விண்ணில் அனுப்பவுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சூரியனைப் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தாலும், சூரியனைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் உண்மைகள் இன்னும் வெளிப்படவில்லை. நாசா அனுப்பிய ஃபார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நெருங்கிய நிலையில் இருந்தாலும், கரோனா என்ற வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.சூரியனின் மேற்பரப்பைச் சுற்றி உள்ள வளிமண்டலம் அதிக வெப்பத்தைக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகக் கூறப்படவில்லை. சூரிய வளிமண்டலமான கரோனா 20 லட்சம் டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை அடைந்திருப்பதால், சூரிய கதிர்வீச்சின் தீவிரம் அதிகரிக்கிறது, இதனால் சில நேரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ள Proba – 3 என்ற விண்வெளி திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சூரிய கிரகணம் நிகழும் போது, சூரிய வளிமண்டலத்தைப் பற்றிய பல கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடிக்க அறிவியலாளர்களுக்கு சிரமமாகவே உள்ளது.ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து Proba – 3 என்ற திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கை கோள்களை உருவாக்கியுள்ளனர், இது சூரியகிரகணத்தை ஆராய்வதற்கான ஒரு முயற்சியாகும். இதில், 200 கிலோ எடையுள்ள ஒரு செயற்கைகோள் சூரியனின் நிழலை மறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் 340 கிலோ எடையுள்ள கருனோக்ராப் என்ற மற்றொரு செயற்கைகோள் தொலைநோக்கியாக செயல்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், செயற்கையாக சூரியகிரகண நிகழ்வுகளை விண்வெளியில் இருந்து ஆராய்ந்து, அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 1780 கோடி மதிப்பீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளித்துறையின் வெற்றிகரமான ராக்கெட்டான பிஎஸ்எல்வி மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த திட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிசம்பர் 4ஆம் தேதி செயல்படுத்தப்படவுள்ளது. 600 கிமீ உயரத்தில் ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்திய பிறகு, இரண்டு செயற்கை கோள்களும் தனித்தனியாக பிரிந்து 19 மணி நேரத்திற்கு ஒரு முறை பூமியை சுற்றி செல்லும். இந்த இடைவெளியில், ஒரு செயற்கை கோள் சூரியனை மறைத்து, மற்றொரு செயற்கை கோள் தொலைநோக்கியால் தரவுகளை சேகரிக்கும். இந்நிகழ்வில், இஸ்ரோவின் ராக்கெட் பயன்படுத்தப்படுவதுடன், 2001 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் நடத்திய Proba – 1 திட்டத்தையும் இஸ்ரோ முன்னதாக செயல்படுத்தியது மற்றும் சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ ஆதித்யா எல்.1 திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *