திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் சித்தர்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 156 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.08) முதல் வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் வெளியான அறிக்கையில்; திருவண்ணாமலை மாவட்டத்தில் 13.12.2024 அன்று நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு 08.12.2024 முதல் 16.12.2024 வரை 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 16000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பார்வை 1இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கிணங்க, இணைப்பில் உள்ள 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு 08.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என சார்ந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *