உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் போர் நிறுத்த ஒப்பந்தங்களை கையெழுத்திட மாட்டார்’ என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கான பதிலாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது, “உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால், நான் என் பதவியை விலக்க தயாராக இருக்கிறேன்” என்றும், மேலும் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் நிலை வழங்கப்பட வேண்டும். ரஷியாவின் முழுமையான படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்திகள் மிகவும் அவசியம் என்றும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். நேட்டோ நாடுகளுள் உக்ரைன் ஒன்றானால் பாதுகாப்பு வழங்கும் படையினரால் பாதுகாக்கப்படுவோம். குறிப்பாக, நேட்டோ உறுப்பினர் நாடுகளை யாராவது தாக்கினால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து ஆதரவாக வருவார்கள். இதனால் உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது, போரின் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

