மழை காரணமாக நிறுத்தப்பட்ட பெங்களூரு ஆட்டம்; இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை விளையாட்டு

மழை காரணமாக கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 13 போட்டிகளில் மொத்தம் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
Eqஇந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றத்தால் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் புரிந்துணர்வு மேற்கொண்டதை அடுத்து சனிக்கிழமை முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது. இதன் படி இன்று ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது.
ஆனால் அதிக மழை காரணமாக போட்டி தொடங்குவது தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. கடைசியாக இரவு 9.55 மணியளவில் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக மேட்ச்சை நடத்தலாம் என்று நடுவர்கள் தீர்மானித்திருந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ததால் இரவு 10.23 மணியளவில் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதன்படி ஆர்சிபி அணி 12 போட்டிகளில் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 13 போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்ற கொல்கத்தா அணி தொடரை விட்டு வெளியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *