நடுக்கடலில் பற்றி எரியும் சிங்கப்பூர் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்.

இந்தியா உலகம் சிங்கப்பூர் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் விபத்துகள்

நடுக்கடலில் பற்றி எரியும் சிங்கப்பூர் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்.இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சென்ற “MV Wan Hai 503″ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது தீடிரென்று தீ பிடித்து எரிய தொங்கியது.தீ மளமளவென பரவி கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் சில வெடித்து சிதறின.சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விமானம் மூலமும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.கப்பலில் இருந்த பதினெட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர் .மேலும் நான்கு பேர் மாயமான நிலையில் அவர்களை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் தீ முழுமையாக அணைக்கபடாத நிலையில் விமானங்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *