குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைக் கொலை செய்யும் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்.

அரசியல் ஆரோக்கியம் இந்தியா இயற்க்கை உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள்

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கும் சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மசோதாவுக்கு ஆதரவாக 314 எம்.பி.க்களும், எதிராக 291 பேரும் வாக்களித்தனர். இதற்குப் பிறகு அந்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மட்டுமே முடியும். பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றிய மசோதாவை மேலவையால் நிராகரிக்க முடியாது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவர்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *