நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு!!

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள்

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் மட்டும் குளிர் மற்றும் பனி காரணமாக 2026 அக்டோபர் 1-ம் தேதி கணக்கெடுப்பு தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ” நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவு செய்யப்படும்.செயலியில் பதிவு செய்யப்படும் தகவல்கள் உடனுக்குடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் சர்வருக்கு அனுப்பப்படும். பொதுமக்கள் தாங்களே விவரங்களை பதிவு செய்யவும் வலைப்பக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *