தவெக மதுரை மாநாட்டின் தேதி மாற்றம்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மாநாடு

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்தார். இதையடுத்து தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் விநாயகர் சதுர்த்தி 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து 17-ந்தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ந்தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல்22-ந் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தவெக மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *