53 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி

அரசியல் இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

டெல்லியில் காற்று மாசை குறைக்கும் நோக்கில், 53 ஆண்டுகள் கழித்து நேற்று செயற்கை மழை (மேக விதைப்பு) சோதனை மேற்கொள்ளப்பட்டது.குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டுவதால், ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தீவிரமாகிறது. இதனை சமாளிக்க, காற்றில் கலந்த அடர்த்தியான மாசு துகள்களை கலைக்க செயற்கை மழையை பெய்யச் செய்வது என்ற திட்டத்தை டெல்லி அரசு உருவாக்கியது.இதற்காக, டெல்லி அரசு கான்பூர் ஐஐடி (IIT Kanpur) உடன் ஒப்பந்தம் செய்தது. நேற்று வானிலை சாதகமாக இருந்ததால், மேக விதைப்பு சோதனை நடத்தப்பட்டது.உத்தரப்பிரதேசம் கான்பூரிலிருந்து புறப்பட்ட செஸ்னா வகை விமானம், சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்து, புராரி, விஹார், கரோல் பாக் உள்ளிட்ட டெல்லி பகுதிகளில் திரண்டிருந்த மேகங்களின் மீது சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன.ஆனால் மழை பொழியவில்லை. மொத்தம் மூன்று முறை இவ்வாறு மேக விதைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டும் எந்த மழையும் பெய்யாததால், அரசு அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.இருப்பினும், நவம்பர் 30 வரை மேக விதைப்பு முயற்சிகள் தொடரும் என கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *