தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நினைவு விழாவை , இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவை இந்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடல் அடிமைத்தனத்தில் இருந்த இந்திய மக்களுக்கு புதிய உற்சாகமும் தேசபக்தி உணர்வும் கொடுத்தது.இந்த பாடல் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு ஊக்கம் அளித்து, தேசிய ஒற்றுமையையும் பெருமையையும் உருவாக்கியது. அதனால் இந்த ஆண்டு முழுவதும் நவம்பர் 7, 2025 முதல் நவம்பர் 7, 2026 வரை பல நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெறும் என கூறப்படுகிறது . இன்று டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, சிறப்பு தபால் தலை மற்றும் நினைவுப் நாணயத்தை வெளியிட்டார்.விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின் பிரதமர் மோடி கூறியதில்,“இன்று நவம்பர் 7ம் தேதி நம் நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். தலைமுறைகளாக தேசபக்தியை ஊட்டிய வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை நாம் பெருமையுடன் கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

