காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளது

அமெரிக்கா ஆப்ரிக்க நாடுகள் ஆரோக்கியம் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு செய்திகள் மருத்துவம் முதன்மை செய்தி

மத்திய ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாக கருதப்படும் எபோலா, மனித உடலின் உள் உறுப்புகளை கடுமையாக பாதித்து ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.கடந்த 2018ஆம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா பரவலின்போது சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் அந்த நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. புதிய அலை பரவலால் இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் இந்த எபோலா தொற்று, அரிதான “பண்டிபுக்யோ” வைரஸ் வகையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் (WHO), இந்த நிலையை சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *