அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 14 அம்ச ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவது, ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது மற்றும் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது ஆகும்.
ஒப்பந்தத்தின் முக்கிய 14 அம்சங்கள்:
1. அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம்அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களின் கூட்டணி நாடுகள் அனைத்து பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன. லெபனான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2. உள்விவகாரங்களில் தலையீடு இல்லைஇரு நாடுகளும் ஒருவருக்கொருவர் இறையாண்மை மற்றும் உள்நாட்டு விவகாரங்களை மதித்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
3. 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்இரு நாடுகளும் 60 நாட்களுக்குள் முழுமையான இறுதி ஒப்பந்தத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும்.
4. கடற்படை முற்றுகை நீக்கம்ஈரான் துறைமுகங்கள் மீதான தடைகள் மற்றும் கடற்படை கட்டுப்பாடுகளை அமெரிக்கா படிப்படியாக நீக்கும்.
5. ஹோர்மூஸ் நீரிணை திறப்புஉலக வர்த்தகத்தில் முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல ஈரான் நடவடிக்கை எடுக்கும். கப்பல் போக்குவரத்துக்கு கட்டணம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. ஈரான் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி திட்டம்ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக 300 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் உருவாக்கப்படும். ஆனால் அமெரிக்கா நேரடியாக நிதி வழங்காது என கூறப்பட்டுள்ளது.
7. பொருளாதார தடைகள் நீக்கம்ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்.
8. அணு ஆயுதம் உருவாக்கக் கூடாதுஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ, வைத்திருக்கவோ கூடாது என ஒப்புக்கொண்டுள்ளது. அணுசக்தி நடவடிக்கைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இருக்கும்.
9. தற்போதைய அணுசக்தி நிலை தொடரும்இறுதி ஒப்பந்தம் உருவாகும் வரை இரு நாடுகளும் தற்போதைய நிலையை பராமரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
10. புதிய தடைகள் விதிக்கப்படாதுபேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதிக்காது.
11. முடக்கப்பட்ட நிதி விடுவிப்புஈரானின் முடக்கப்பட்ட நிதிகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
12. கண்காணிப்பு அமைப்பு உருவாக்கம்ஒப்பந்தம் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க இரு நாடுகளும் ஒரு அமைப்பை உருவாக்கும்.
13. இறுதி ஒப்பந்த பேச்சுவார்த்தைதற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து நீண்டகால இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
14. ஐநா அங்கீகாரம்இறுதி ஒப்பந்தம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் மூலம் உறுதி செய்யப்படும்.
உலக அரசியலில் முக்கிய மாற்றம்அமெரிக்கா – ஈரான் இடையிலான பல மாத மோதல்களுக்கு பிறகு உருவாகியுள்ள இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் நடைமுறையில் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தொடர்ந்து கவனிக்கப்படும்.

