உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தாஜ்மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக உலகக்கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆடவருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள உலகக்கோப்பை உத்திரப்பிரதேசத்தில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. பிரசித்திபெற்ற தாஜ்மஹாலில் வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பையுடன் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.