கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய புதிய சாதனை; அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்படும் படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட படங்கள் அடங்கும். இந்நிலையில், இந்திய நடிகையான அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இதன் மூலம் இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, ’தி ஷேம்லெஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான ’அன் செர்ட்டன் ரெகார்ட்’ விருதை வென்றுள்ளார்.

