உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா அணியுடன் அக்டோபர் மாதத்தில் இந்தியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்பந்து உலகக் கோப்பை சாம்பியனான ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். மேலும், ஆர்ஜென்டீனா அணியினர் 2025-ல் கேரளாவின் கொச்சி நகரில் நட்பு முறை கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளவிருப்பதாக கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் வி அப்துர் ரஹிமான் கூறியுள்ளார்.இந்த சூழலில், இந்தியாவில் கால்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக, ஆர்ஜென்டீனா அணியின் அதிகாரப்பூர்வ பங்குதாரரான ஹெச்.எஸ்.பி.சி. இந்தியா நிறுவனம், வரும் அக்டோபர் மாதத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதன் மூலம், உலக புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸி உட்பட ஆர்ஜென்டீனா அணியினர், அக்டோபர் 2025-ல் சர்வதேச நட்புறவு போட்டிகளில் விளையாட இந்தியா வருவதாக ஹெச்.எஸ்.பி.சி. இந்தியா தெரிவித்துள்ளது. முதன்முறையாக 14 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த ஆர்ஜென்டீனா அணி, கேரளத்தில் நடைபெற்ற சர்வதேச நட்புறவு போட்டியில் வெனீசுலாவுக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் எந்த கோலும் அடிக்கப்படாமல், டிராவில் முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது.

