இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவுக்கு கிரிக்கெட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. கிரிக்கெட் தொடர்பான பல திரைப்படங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி சினிமாக்களிலும் வெளியாகியுள்ளன. அதேபோல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பலரது வாழ்க்கை வரலாறுகள் புத்தகமாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு “எம்.எஸ்.தோனி – அண்டோல்ட் ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்த யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறும், விரைவில் திரைப்படமாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை டி-சீரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் யுவராஜ் சிங் ஆக நடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.