எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் நடைபெற இருந்த முதல் பொதுகூட்டம் ரத்து செய்யப்படுகிறது; கமல்நாத் அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ்,ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து, இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் அண்மையில் நடைபெற்றபோது, எதிர்கால திட்டங்களை வகுக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் முதல் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் டெல்லி இல்லத்தில் இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி. வேணுகோபால், தி.மு.க.சார்பில் டி.ஆர்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் கட்சிலிருந்து அபிஷேக் பானர்ஜி, சிவசேனா- உத்தவ் பிரிவில் இருந்து சஞ்சய் ராவுத்,ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர் மத்தியில் கூறுகையில், இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல் முதலில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கான காரணம் குறித்து தெளிவாக இன்னும் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.