உலகம் முழுவதும் கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் பக்கங்களில் புளூடிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
ட்விட்டரில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசுத்துறைகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கு அங்கீகார குறியீடு வழங்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், புளூடிக் பெறுவதற்கான கட்டணத்தை அறிவித்தார். ஒவ்வொரு கணக்குக்கும் 8 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, இந்திய மதிப்பில் மாதந்தோறும் 657 ரூபாய் கட்டணம் செலுத்துவோருக்கு புளூ டிக் வழங்கப்படும் எனவும், ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தாதவர்களின் பக்கங்களில் புளூடிக் நீக்கப்படும் எனவும் ட்விட்டர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
![](https://nritamil.com/wp-content/uploads/2023/04/images.jpg)