நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா; கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம் அரசு

அரபு நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சிறப்பு சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி ரியல் எஸ்டேட்

அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் விசாவுக்கான அமீரக அடையாள அட்டையை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்த பிறகு அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து அவர் அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்ட இந்து கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அவர் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசலுக்கு சென்று பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *