அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் வட அமெரிக்கா

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக முடிந்தது. தேர்தலுக்கு பிறகு, தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டமாக இது கருதப்படுகிறது.இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள இந்திய அமெரிக்க அமைப்புகள், இந்து அமெரிக்க அறக்கட்டளை, அமெரிக்க சீக்கிய அமைப்புகள், வட அமெரிக்காவின் ஜெயின் அசோசியேஷன் மற்றும் வாழும் கலை போன்ற பல அமைப்புகளுடன் இணைந்து கொண்டாடப்பட்டது மேலும் அங்கு அமைத்துள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலிலும் தீபாவளி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 24-க்கும் மேற்பட்ட அமெரிக்க எம்பிக்கள் மற்றும் செல்வாக்குமிக்க இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட செனட்டர் ராண்ட்பால் கூறுகையில், “அமெரிக்கா புலம்பெயர்ந்தோர் நாடு. இது, உலகின் பல்வேறு இடங்களில் உள்ள சிறந்த மற்றும் பிரகாசமானவர்களை ஈர்க்கிறது. அமெரிக்காவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்காக அவர்கள் ஒன்றிணைகிறார்கள். சட்டபூர்வ குடியேற்றத்திற்காக நான் ஒரு வழக்கறிஞராக தொடர்ந்து போராடுவேன். அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாளாக அமையட்டும்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *