டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு அதிகரித்திருந்ததால் முன்னதாக பட்டாசுகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு.பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் இருப்பதால், அவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி NCR பகுதிகளில் இன்னும் முழு தடை நீடிக்கிறது.மேலும், பசுமை பட்டாசுகள் உண்மையானவையா என்பதை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும். போலீசார் ரோந்து பணியில் உற்பத்தி நிலையங்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. அனைத்து பசுமை பட்டாசுகளுக்கும் QR குறியீடு இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். போலி பட்டாசுகள் விற்பனை செய்தால், அந்த விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

