ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பில், இனிமேல் ChatGPT சட்டத்தில், மருத்துவம் மற்றும் நிதி தொடர்பான நேரடி ஆலோசனைகளை வழங்காது என தெரிவித்துள்ளது.இந்த முடிவு, சட்ட ரீதியான சிக்கல்கள், தவறான வழிகாட்டல்கள் மற்றும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் விளக்கியுள்ளது.ஓபன் ஏஐ தெரிவிக்கையில், ChatGPT இனி விளக்கத் தரும் கல்வி கருவியாக மட்டுமே செயல்படும். இது சட்ட ஆலோசகர், மருத்துவர் அல்லது நிதி நிபுணர் என கருதப்படக் கூடாது என்றும், உரிமம் பெற்ற நிபுணரின் மேற்பார்வை இல்லாமல் முக்கியமான முடிவுகளை தானியங்கி முறையில் எடுப்பதற்கும் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

