சாட் ஜிபிடி செயலி, இஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்–ஐ பின்னுக்கு தள்ளி, உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது. 2025 மார்ச் மாதத்தில், ChatGPT உலகின் மிக அதிகமாக பதிவிறக்கப்பட்ட செயலியாக உள்ளது. ஆப் ஃபிகர்ஸ் (App Figures) என்ற நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், சாட் ஜிபிடி செயலி மார்ச் மாதத்தில் மட்டும் 46 மில்லியன் புதிய பதிவிறக்கங்களை பெற்றுள்ளது, இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகமாகும். 2025-இன் முதல் காலாண்டில், ChatGPT, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 148 சதவீதம் அதிக பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.ChatGPT-ன் பிரபலத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, மார்ச்சில் அறிமுகமாகிய புதிய அப்டேட் Studio Ghibli இதன் மூலம் நம் படங்களை ஜிபிலி முறையில் உருவாக்கும் . Studio Ghibli மீம்ஸ்களில் பரவலான புகழ் பெற்றுள்ளன, இது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் சாட் ஜிபிடி பயன்பாடு அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் அதே அளவிலான பதிவிறக்கங்களை பெற்றாலும், ChatGPT-க்கு பின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முகநூல் (Facebook) மற்றும் புலனம் (WhatsApp ) ஆகிய செயலிகள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

