மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது. அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று முடங்கியது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், கணக்குகள் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனாளர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
இது தொடர்பாக கூடுதல் விவரம் அறியவும், புலம்புவதற்கும், ஏராளமான பயனாளர்கள் எலான் மஸ்கின் எக்ஸ் பக்கத்தில் குவிந்தனர். அவர்களை வரவேற்ற எலான் மஸ்க், தற்போது அனைவரும் ஏன் இங்கே கூடியிருக்கிறீர்கள் என தெரியும் என்று பதிவிட்டார்.
பேஸ்புக், இன்ஸ்டா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலியும் சற்று தடுமாறியது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர் பெர்க், சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்.
சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய மெட்டோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்பட்டதாக கூறினார்.

