தமிழ்நாடு அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி ரியல் எஸ்டேட் வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை (பிப். 19) காலை 10 மணிக்கு கூடுகிறது. 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்.19) தேதியன்று தாக்கல் செய்யவுள்ளார். நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வரும் 20-ம் தேதியன்று தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் 7 முக்கிய அம்சங்கள் :
சமூகநீதி
ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம்.
தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது.
அறிவுசார் பொருளாதார வளர்ச்சி.
சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம்.
நிலையான எதிர்காலம்.
தமிழ்மொழி மற்றும் பண்பாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *