தளபதி விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் சினிமாவில் தனது கடைசி படமாக கருதப்படும் தளபதி 69 படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. விஜய் நடித்துவரும் 69வது படத்தின் தலைப்பு மற்றும் லூக் போஸ்டர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படம் விஜய்யின் கடைசி படம் எனக் கூறப்படுவதால், இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என நெடிசன்கள் கூறப்படும் நிலையில் விஜய் – 69 படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

