சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவர்; இந்திய ராணுவம் BSNL நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ளது

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும். இந்த உயரமான பனிமலைப் பகுதியில் 1984-ம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றன. ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவப் பிரிவினர் இங்கு நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் நிறுவப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் இந்த செய்தியை தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘சியாச்சின் வாரியர்ஸ் BSNL உடன் இணைந்து, 15,500 அடிக்கு மேல் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளவும், தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் ஏதுவாக அக்டோபர் 06-ம் தேதி, BSNL BTS என்னும் டவர் லைனை நிறுவியது’ என்று பதிவிட்டுள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் BSNL நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மிகவும் உயரமான பனிமலைப் பகுதியில் செல்ஃபோன் டவர் லைனை நிறுவியது, இந்திய ராணுவத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.