76வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிராபோவோ சுபியாண்டோ ( Prabowo Subianto ) கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்தோனேஷிய அதிபர் பிராபோவோ சுபியாண்டோ இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் 76வது குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிராபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷிய அதிபராக பதவியேற்ற பிராபோவோ சுபியாண்டோ முதல் முறையாக இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிராபோவோ சுபியாண்டோ பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது.
இந்நிலையில்,பிராபோவோ சுபியாண்டோ-வின் பாகிஸ்தான் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

