கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வலியுறுத்தியது. இதற்கு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும் இதற்கு தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இவ்வாறு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டாம் என்று இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏராளமான கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து, Curd (Dahi) அல்லது Curd (Mosaru) அல்லது Curd (Zaamut daud) அல்லது Curd (Perugu) அல்லது Curd (தயிர்) என்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று என்று இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.