இந்தியாவில் இந்தாண்டு மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில்தான் அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் அதிகபட்சமாக 29.54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. முன்னதாக 2016ம் ஆண்டு 29.48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.இந்நிலையில், இந்தாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும், மார்ச் முதல் மே வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 3 மாதம் இயல்பைவிட அதிக வெப்ப அலை நாடு முழுவதும் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒன்றிய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.