இந்தியாவில் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பொருளாதாரம் முதன்மை செய்தி

இந்தியாவில், மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில்கள் விரைவில் அறிமுகமாகவுள்ளன. இந்திய மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோரின் கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, “Make in India” திட்டத்தின் கீழ் பாரத் ரயில்களின் வெற்றியை தொடர்ந்து, இந்திய ரயில்வே (ஐஆர்) தற்போது அதிவேக ரயில் பெட்டிகளை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. சென்னையில் உள்ள ஐசிஎஃப் (ICF) மற்றும் BEML உடன் இணைந்து இந்த அதிவேக ரயில்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியவை. ஒரு ரயிலை உருவாக்குவதற்கான செலவு சுமார் ரூ.28 கோடி (வரி தவிர) ஆகும், மேலும் இந்த ரயில்களில் இருக்கை வசதிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரயிலில், ஏரோடைனமிக் வெளிப்புறம், மூடிய கேங்வேகள், தானியங்கி கதவுகள், சிசிடிவி கண்காணிப்பு, செல்போன் சார்ஜிங் வசதி, தீ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட விளக்குகள் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ரயிலின் அறிமுகம் விரைவில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *