கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தான் இந்தியாவின் பணக்கார எம்எல்ஏ; ஆச்சர்யப்பட வைக்கும் சொத்து மதிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

இந்தியாவிலேயே 20 பெரிய பணக்கார எம்எல்ஏகள் பட்டியலில் 12 இடங்களை கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர். Association for Democratic Reforms என்ற அமைப்பு இந்தியாவில் வசதி படைத்த எம்எல்ஏக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் 1,413 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் சுயேச்சை எம்எல்ஏவான புட்டசாமி கவுடா இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 1267 கோடி ரூபாயாக உள்ளது. 3ஆவது இடத்தில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியா கிருஷ்ணா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ஆயிரத்து 156 கோடி ரூபாய்.
100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்திருக்கும் எம்எல்ஏக்கள் பட்டியலில் கர்நாடகம் 14 விழுக்காடு எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.
ADR பட்டியலின்படி,நாட்டிலேயே குறைவான சொத்து வைத்திருக்கும் பட்டியலில் மேற்குவங்க பாஜக எம்எல்ஏ Nirmal Kumar Dhara உள்ளார். இவரின் மொத்தசொத்துமதிப்பு வெறும் ஆயிரத்து 700ரூபாய் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *