இந்தாண்டுக்கான பட்டியலில் 78 விழுக்காடு மக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற வர்த்தக புலனாய்வு நிறுவனம், அமெரிக்கா, இந்தியா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளின் ஆட்சியாளர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக, அந்தந்த நாடுகளில் (Nationally representative samples) உள்ள கணிசமான மக்களிடம் ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு மேற்கொள்கிறது. அமெரிக்காவில் தோராயமாக 45,000 பேரிடமும், இதர நாடுகளில் 500 – 5000 வரையிலான மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்தாண்டுக்கான பட்டியலில் 78 விழுக்காடு மக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். சுவசர்லாந்து அதிபர் 64 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ அதிபர் 61 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மோடி அரசின் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு இந்திய மக்களின் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் ஆகியோரின் கொள்கை முடிவுகளில் அந்நாட்டு மக்கள் திருப்தி கொள்ளவில்லை என்று தெரிய வந்துளளது.
