கிரிக்கெட்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள் அப்டேட்; இந்திய அணிக்கு நான்காமிடம்

ஆப்ரிக்க நாடுகள் ஆஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மேட்ச்சுக்கு பின்னர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் இடம் குறித்து பார்க்கலாம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த 2 ஆண்டுகளில் ஒரு அணி பெறக்கூடிய அதிகபட்ச வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும்.
தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்துள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் அடிப்படையில் பாயின்ட்ஸ் டேபிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று வெற்றி சதவீதம் 100-உடன் முதலிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் 2ஆம் இடத்தில் உள்ளது. இதே வெற்றி சதவீதத்துடன் இலங்கை அணி 3 ஆம் இடத்திலும், இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியும், 1மேட்ச்சில் டிராவும் அடைந்த நிலையில் 54.17 வெற்றி சதவீதத்துடன் 4 ஆம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *