இந்தியா மற்றும் சீனாவின் எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு சீனா செய்திகள் பொருளாதாரம்

இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தை தொடங்க சீனா ஒப்புதல். அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான பேச்சுவாா்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.சீனாவுடனான வா்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகின்றன. ஹிமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா, உத்தரகண்டின் லிபுலேக், சிக்கிமின் நாதுலா ஆகிய மூன்று எல்லைப்பகுதிகள் வழியாக வா்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசு சீனாவிடம் பேசி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஹிமாசல பிரதேச அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *