நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடக்கும் நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடக்கவுள்ள நவராத்திரி கொலு விழாவினை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க உள்ளார்.
நாள்தோறும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி கொண்டாட்டங்களிலும் தனிநபர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

