சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ‘செய்திகள் வெளிவந்ததால் பரபரப்பானது.
அலுவலகத்திற்கு வாடகை கொடுக்கப்படாததால் கட்டிடத்தின் உரிமையாளர் பூட்டு போட்டு, ஊழியர்களை வெளியேற்றியதாக பின்னர் தகவல்கள் தெரிவித்தன.
வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.
இதனை அறிந்த டிவிட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க், ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் செல்லாமல் வெளியே இருந்து வேலை பார்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
தற்போது சிங்கப்பூரில் Twitter நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாக செய்தி வந்துள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல சர்ச்சைகள், பிரச்சனைகள் என நீண்டுகொண்டே போகிறது.