உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்கள் பட்டியல் வெளியீடு – இந்திய பிரதமர் மோடி முதலிடம்

அரசியல் இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் கனடா செய்திகள் நிகழ்வுகள் வட அமெரிக்கா

அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின்படி, உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 78% ஒப்புதல் மதிப்பீட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு எதிராக 18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் லாபெஸ் ஒபராடோர் 68% பெற்று 2வது இடத்தையும் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 62% பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். தொடர்ந்து இந்த பட்டியலில் 40 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் முறையே 7 மற்றும் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 30% பெற்று பட்டியலில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.