பாஸ்மதி அல்லாத அரிசி, ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்கள் அரிசி வாங்க போட்டாபோட்டி

அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது,” என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அரிசியின் சில்லறை விற்பனை விலை ஓராண்டில் 11.5 சதவீதமும் கடந்த ஒரு மாதத்தில் 3% சதவீதமும் உயர்ந்துவிட்டதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உணவு தானியங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்காற்றும் இந்தியா, தற்போது பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையால் உணவு பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *