ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை அணி தக்கவைத்துள்ள ஐந்து வீரர்கள் யார் என்பதும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை குறித்தும் தெரியவந்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 5 மணிக்குள் retention பட்டியலை IPL ஆட்சிக் குழுவுக்கு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட retain மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
சென்னை அணியைப் பொறுத்தளவில் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பதிரனா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.
அது தற்போது உறுதியாகியுள்ளது. அனிருத் இசையில் ஒரு சூப்பர் அறிவிப்பு வீடியோவை இதற்காக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா தலா ரூ.18 கோடிக்கும், மதீஷா பதிரனா ரூ.13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்கும், தோனி ரூ.4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
தோனியை Uncapped பிளேயராக சென்னை அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. இதன்மூலம் தோனி இந்த ஆண்டும் ஐபிஎல்லில் விளையாடுவது உறுதியானது.
