ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே அணி வீரர்கள்; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி விளையாட்டு

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியுடன் இந்த சாதனையை சமன் செய்தது. மேலும், சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாயும், 2வது இடம் பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சிஎஸ்கே அணி வெற்றிக் கோப்பையுடன் இன்று சென்னை வந்தடைந்தது. இவர்களுடன் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்னை வந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் பட்டாளம் சென்னை விமான நிலையத்தில் திரண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *