குன்னூரில் இருந்து உதகை நோக்கி புதிய டீசல் மலை ரயில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில், நூற்றாண்டுகள் கடந்தும் அதன் பழமையை காத்து, தற்போது வரை இயங்கிக் கொண்டு வருக்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இருவரும் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர்.இந்நிலையில், இங்கிலாந்து நாட்டிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்ய குன்னூருக்கு வந்துள்ளனர். குன்னூரில் இருந்து உதகைக்கு வழக்கமான டீசல் இஞ்சின் இயக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக, புதிய எக்ஸ் கிளாஸ் நீராவி இஞ்சின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, பழைய காலத்தில் போலவே இயக்கப்பட்டது. எதிர்வரும் கோடை பருவத்திற்கு இதே இஞ்சினை பயன்படுத்தி மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
