சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி.

ஆஸ்திரேலியா இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விளையாட்டு

துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று விறுவிறுப்பாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 265 ரன்களை 48.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி. இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்றாவது முறை தொடர்ச்சியான ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சாம்பியன்ஸ் டிரோபி வரலாற்றில் இந்தியாவின் மிக அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் வெற்றி 3-3 சமநிலையை முறியடித்தது. புதன்கிழமை நடைபெறும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *