மாமன்னன் ராஜராஜன் சதயவிழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தொடங்கியது

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனுக்கு சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. முன்னதாக பந்தக்காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சதய விழாவை முன்னிட்டு வரும் நவ.2 ஆம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.
நவ.3 ஆம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *