உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி

ஆப்ரிக்க நாடுகள் ஆஸ்திரேலியா இந்தியா இலங்கை உலகம் செய்திகள் பாகிஸ்தான் முதன்மை செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியிருந்த நிலையில் இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (66.67%), ஆஸ்திரேலியா (58.89%), இந்தியா (55.88%), நியூசிலாந்து (48.21%), இலங்கை (45.45%), இங்கிலாந்து (43.18%) அணிகள் முதல் 6 இடங்களில் உள்ளன.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியை அடுத்து 7வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் (30.30%) 8வது இடத்திற்கு சரிந்தது. 8வது இடத்தில் இருந்த வங்காளதேசம் (31.25%) 7வது இடத்திற்கு முன்னேறியது. 9வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (24.24%) உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியுள்ளதால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *