கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். 6 வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் பெற்ற வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 5 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற கேத்ரினா லாங்கா 2-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் 2026 ல் நடைபெறும் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதன் மூலம் இந்த பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் வைஷாலி. இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் ஏற்கனவே கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், 3வது நபராக வைஷாலியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

