பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஓர் துணை நகரம்; ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கர்நாடகா அரசு தகவல்

அரசியல் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி ரியல் எஸ்டேட் வரும் நிகழ்ச்சிகள் விவசாயம் வேலைவாய்ப்புச் செய்திகள்

இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக பெங்களூரு இருக்கும் நிலையில் அதற்கு ஒரு துணை நகரத்தை உருவாக்க கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு கூடிய விரைவில் பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய நகரத்தை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் சுமார் 80 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ன சொல்லப்படுகிறது.
கர்நாடக அரசு KHIR (Knowledge, Health, Innovation and Research) City என்ற பெயரில் ஒரு நகரத்தை நிறுவ உள்ளது. இந்த நகரமானது பெங்களூரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தாபாஸ்பேட் மற்றும் டொபாபலாபூர் பகுதியில் அமைகிறது. இந்த நகரத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கூடிய விரைவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் என மணிகண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக தொழில் துறை அமைச்சர் எம்.பி பாட்டில் இந்த நகரம் சார்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரமானது அமைய இருக்கிறது முதல் கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெறும் என தெரியவந்துள்ளது. முதலில் ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த நகரத்துக்கான திட்ட பணிகளை தொடங்குவதாக இருந்த நிலையில் அதனை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு கர்நாடகா அரசு தள்ளி வைத்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 40,000 கோடி அளவிலான முதலீடுகள் கொண்டுவரப்படும் என்றும் இதன் மூலம் 80 ,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆட்டோமொபைல், செமி கண்டக்டர் ,ஏரோஸ்பேஸ் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் இங்கே தொழில் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெங்களூருவின் துணைநகரமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் கர்நாடகாவின் ஜிடிபி கணிசமான அளவு உயரும் என தொழில் துறை அமைச்சர் எம்.பி பாட்டில் கூறியுள்ளார். மேலும் அனைத்து சர்வதேச நகரங்களுக்குமான ஒரு முன்மாதிரி நகரமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
நாளுக்குள் நாள் மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் என பெங்களூரு நகரில் சிவில் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. எனவே தான் பெங்களூரு அருகிலேயே ஒரு நகரத்தை உருவாக்கும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *