பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, இன்று அக்டோபர் 24 அன்று டில்லிக்கு திரும்பினார். ரஷ்யாவின் கஸான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஈரான் அதிபர் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து உரையாடினார். நேற்று அக்டோபர் 23 சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்தியா மற்றும் சீனாவின் எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பான உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இரு நாட்டினருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. பிரதமர் மோடி தனது x தளத்தில் சில காட்சிகளை பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில், பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயெவ் உள்ளிட்ட பல உலக தலைவர்களை சந்திக்கும் காட்சிகள் உள்ளன. மற்றும் அவர் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற ப்ரிக்ஸ் மாநாட்டை “மிகவும் பயனுள்ளதாக” விவரித்தார். ரஷ்யா ஜனாதிபதி வ்லாடிமிர் புடினுக்கு, ரஷ்ய மக்களுக்கு மற்றும் அவர்களின் அரசுக்கு அவர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தலைமைத்துவத்தில் கசானில் நடைபெற்ற ப்ரிக்ஸ் மாநாட்டின் இரண்டு அமர்வுகளை அவர் உரையாற்றினார் .ரஷ்ய பயணம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு டில்லி திரும்பினார்.
