நார்வே செஸ் தொடரில் முதல்நிலை வீரர் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்

இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலக செஸ் அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் உலக செஸ் சாம்பியன் குகேஷ், உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவரும், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இதுவே மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குகேஷின் முதல் வெற்றி ஆகும்.
இந்த வெற்றிக்கு பிறகு கார்ல்சன் மேஜையை அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய நிலையில் குகேஷ் வெற்றிக்கு பிறகு மரியாதையுடன் நடந்து, வெற்றிபெறும் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். மே 1, ஞாயிற்றுக்கிழமை அன்று நார்வே செஸ் தொடரில் கார்ல்சனின் சொந்த மண்ணிலேயே அவரை வீழ்த்தி குகேஷ் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த வெற்றி, அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
நார்வே செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் கார்ல்சனின் சொந்த மண்ணில், குகேஷ் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். கிளாசிக்கல் தொடரில் கார்ல்சனை குகேஷ் முதல் முறையாக வீழ்த்தி இருக்கிறார். இது குகேஷுக்கு ஒரு திருப்புமுனை வெற்றியாக அமைந்தது. ஏனெனில், நார்வே செஸ் தொடரின் முதல் சுற்றில் கார்ல்சனிடம் கருப்புக் காய்களுடன் விளையாடி குகேஷ் தோல்வியடைந்திருந்தார்.
கார்ல்சன் இந்த போட்டியின் பெரும்பாலான நேரம் கையை மேலோங்க வைத்திருந்தார், ஆனால் குகேஷ் ஒழுக்கத்துடனும் நிதானத்துடனும் தற்காத்துப் போராடினார். கார்ல்சன் நேரம் இல்லாத நெருக்கடியில் தடுமாறியபோது,​​குகேஷ் துல்லியமான எதிர் தாக்குதலுடன் ஆட்டத்தை மாற்றினார்.
கார்ல்சனின் தோல்விக்கு அவர் காட்டிய எதிர்வினை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது – அவர் மேஜையை மிகவும் பலமாக அடித்ததால், குகேஷ் உட்பட அறையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்டாலும், பின்னர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *