மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன்குமாருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வீரர்களுக்கு 17ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க திட்டமிட்டுள்ளார்.

